ஆயுதம் பழகுதல்

நான் கடிதங்கள் அதிகம் எழுதியதில்லை. நினைவு தெரிந்து இரண்டு பேருக்குத்தான் ஆசை ஆசையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவர் தி.க. சிவசங்கரன். இன்னொருவர் லா.ச.ரா. எனக்கு அவர்கள் இருவரிடம் இருந்தும் வரும் பதில் கடிதங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே மாதம் ஒரு கடிதமாவது இருவருக்கும் எழுதிவிடுவேன். தி.க.சியைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இந்தக் குறிப்பு லா.ச.ராவின் கடிதங்களைப் பற்றியது. ஒரு போஸ்ட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு சொற்களை இட்டு நிரப்ப முடியுமோ, லா.ச.ரா அதைச் செய்துவிடுவார். … Continue reading ஆயுதம் பழகுதல்